தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு. Dr. பழனிவேல் தியாகராஜன் இன்று KYN செயலியைத் தொடங்கி வைத்தார்.

Published Date: February 21, 2024

CATEGORY: EVENTS & CONFERENCES

KYNHOOD TECHNOLOGIES நிறுவனம் சார்பில், புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு. Dr. பழனிவேல் தியாகராஜன் இன்று KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் - Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் Dr. PTR பழனிவேல் தியாகராஜன், “தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மட்டுமில்லாது தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது.

Media: Zeenews.inida.com